District Training Assembly – Program on 18th May

DISTRICT TRAINING ASSEMBLY – FIRE 2014

fire2014-header4blog

It is mandatory for all Rotarians doing ROLE at various levels in Club, Zone and District. It is a place to learn and exchange your ideas in the forum at district level. It is the Training for club Committee Chairs, Treasurers, Secretaries, Board Members, New Members, Seasoned Members, and everybody in-between. It creates the opportunity to take your club to the next level with tools you can acquire at the District Training Assembly. With classes on Social Media, Membership, Fundraising, Grant Management, Interact, Rotaract, Youth Exchange, and more…..

the District Training Assembly is THE source for learning about Rotary, Rotary Programs, and the successful operation of your club.

 

FIRE 2014 – Detailed Program on 18th May

More detail on FIRE 2014

District Training Assembly – Program on 17th May 2014

DISTRICT TRAINING ASSEMBLY – FIRE 2014

fire2014-header4blog

The purpose of the district training assembly is to

  • Prepare incoming club leaders for their year in office and build their leadership team
  • Give the district governor-elect, and incoming assistant governors and district committees the opportunity to motivate club leadership teams and build their working relationship.

The functional groups participating in the training include:

  • Club administration
  • Club public relations
  • Membership
  • Service projects
  • The Rotary Foundation
  • Secretary
  • Treasurer
  • President-elect

FIRE 2014 – Detailed Program on 17th May

More detail on FIRE 2014

Rotary’s Areas of Focus – 6

economicபொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சி(Economic And Community Development)

1. வருவாய் மற்றும் சேமிப்பு(Income Generation & Savings)

செய்தி:

  • 19 கோடி மக்கள் குறு மற்றும் சிறிய கடன் வசதிகள் கொண்ட நிதித் திட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • நீங்கள் உள்ளூரிலுள்ள குறு நிதி நிறுவனங்களுடன்(Microfinance Institution) கூட்டக இணைந்து பொது மக்களுக்கு நிதி அடிப்படைத் தேவைகளுக்கு உதவவும்.
  • வளரும் சமுதாயத்தில் செல்போன்கள் மூலமாக வங்கிக் கணக்குகளை செயல்படுத்துவது மிகவும் நன்று. வங்கியுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • சேவைத்திட்டங்களை செயல்படுத்தும்போது தேவையான பொருட்கள் வாங்குவது, வழங்குவது ஆகியவைகளை உள்ளூரிலேயே செய்யுங்கள். இதனால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும்.
  • ரோட்டரி சமுதாய குழுமம் RCC அமையுங்கள். இந்தக் குழுமத்தின் உறுப்பினர்களுக்கு சமுதாயத்தின் பொருளாதார தடைகள் குறித்து அறிவார்கள். தடைகளை நீக்க  தீர்வுகள் காண அவர்களுக்குத் தெரியும்.

2. வேலை வாய்ப்பு ஏற்படுத்தலும் முதலீடு செய்வதும்(Job Creation & Entrepreneurship)

செய்தி:

  • 140 கோடி மக்களில் பாதிக்கு மேல் வேலை செய்து நாளைக்கு 1.25 டாலர்கள்தான் சம்பாதிக்கிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • ஜனநாயக முறையில் செயல்படும் கூட்டுறவு (நிறுவனங்கள்) சங்கங்களுடன் கூட்டாக செயல்படுங்கள். இந்த கூட்டுறவு நிறுவனங்கள் தம் உறுப்பினர்களுக்கு பயிற்சியும், பொருளாதார முன்னேற்றத்திற்கு கூட்டாகத் திட்டங்களைச் செயல்படுத்தியும் சொத்துக்கள் சேர்பதில் உதவியும் செய்பவைகளாக இருக்க வேண்டும்.
  • தொழில் பயிற்சிக் குழுக்களை(Vocational Training Team) அனுப்பி மக்களுக்கு வணிகத் திட்டங்களை திட்டமிடுதளையும் கணக்கு வழக்குகளை நிர்வகிப்பதிலும் பயிற்சி அளிக்கப்படும்.
  • கூட்டுறவு சங்கங்களுக்கு கருவிகளையும் மற்ற பொருட்களையும் வழங்கி உற்பத்தியையும் விற்பனையையும் பெருக்க வழி செய்யவும்.
  • தொழில் பயிற்சித் திட்டங்களை விரிவுப்படுத்துங்கள். வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் திட்டங்களை உள்ளூர் லாப நோக்கமில்லா நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துங்கள்

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • உள்ளூர் சிறூமுதலீட்டாளர்களுக்கு உதவி செய்யுங்கள். இவர்களின் வெற்றி உள்ளூரில் பலமடங்கு வேலை வாய்ப்பினைப் பெருக்கும்.
நன்றி: Rotary News – Apr 2013, தமிழாக்கம் PP Rtn.N.P. ராமஸ்வாமி, RC of இராசிபுரம்.

Rotary’s Areas of Focus – 5

Tags

, ,

educationஅடிப்படைக் கல்வி மற்றும் எழுதப்படிக்கும் திறமை(Basic Education and literacy)

1. ஆசிரியருக்குப் பயிற்சி(Teacher Training)

செய்தி:

  • 5 குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் 31 சதவீத மேல்நிலைப்பள்ளி ஆசிரியரகள் முறைப்படி பயிற்சி பெறாதவர்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • ஆசிரியர் பயிற்சி, பள்ளிப்பாடத்திட்டங்கள், பள்ளிக்குத் தேவையான பொருட்கள் ஆகியவைகளை வழங்குங்கள்.
  • Vocational Training Team தொழில் பயிற்சிக்குழு ஒன்றினை கிராமப்புறங்களுக்கு அனுப்பி பாடத்திட்டங்களை மேம்படுத்தும் பயிற்சி அளியுங்கள்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • ஆசிரியர்களுடன் நீண்டகாலத் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தற்கால பயிற்சி முறைகளையும், பயிற்சிப் பொருட்களையும் வழங்குங்கள்.
  • ஆசிரியர் பயிற்சித் திட்டங்களையும், பாடத்திட்டங்களையும் தீட்ட கல்வித்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசியுங்கள்.

2. மாணவர்களுக்கு உதவிகள்(Supporting Students)

செய்தி:

  • 7.5 கோடி குழந்தைகள், இவர்களில் 4.1 கோடி குழந்தைகள் பெண் குழந்தைகள் படிக்க வழி இல்லாதவர்கள், வாய்ப்பினைப் பெறாதவர்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • வகுப்பறைகள் கட்டிக் கொடுங்கள். கல்விக்குப் பிறகு திட்டங்களை ஏற்பாடு செய்யுங்கள்.
  • பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தொடர்பானப் பிரச்சனைகளை களையுங்கள்.
  • பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுதல், சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுதல் மற்றும் சுகாதாரக் கழிப்பிடங்கள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தவும்.
  • ரோட்டரியின் CLE (Concentrated Language Encounter) திட்டத்திற்கு ஆதரவளியுங்கள். இத்திட்டம் குறைந்த செலவு திட்டமாகும்.

செய்தி:

  • 67.7 கோடி பேர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • முதியோர் கல்வித் திட்டத்தை உருவாக்குங்கள்.
  • மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் திகழுங்கள்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • பெண்கள் கல்விக்கு கலாச்சாரத் தடைகளை நீக்குங்கள். அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் குடும்ப வருமானத்திற்கு வழிகள் செய்யவும். ஆண் பெண் பேதங்கள் நீக்குவதால் சமுதாயம் மேம்படும்.
  • உங்கள் முயற்சிகளுக்கு, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோர்களின் ஆதரவைத் தேடி ஈடுபடுத்துங்கள்.
  • CLE நிகழ்ச்சியை உள்ளூர் மக்களின் உதவியுடன் செயல்படுத்துங்கள்..
நன்றி: Rotary News – Apr 2013, தமிழாக்கம் PP Rtn.N.P. ராமஸ்வாமி, RC of இராசிபுரம்.

RCC – MARUDHAM 2014

ரோட்டரி சமுதாய குழுமம் (Rotary Community Corps)

rccRCC என்பது ரோட்டரி சங்கத்தால் ஆதரிக்கப்படும், தங்களுடைய சமுதாயத்தின் முன்னேற்றம் மற்றும் தன்னிறைவுக்காக உறுதிபூண்ட ரோட்டரிசங்கத்தில் உறுப்பினரல்லாத ஆண்கள் மற்றும் பெண்களைக்கொண்ட ஒரு குழுவாகும். இதன் தத்துவம், ரோட்டரி சமுதாய குழும உறுப்பினர்கள் தாங்கள் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அடையளம் கண்டு தாங்களே தீர்வுகாண்பதாகும். Rotaract மற்றும் Interact-ஐ போல RCC ம் ரோட்டரியுடன் இனைந்து சேவை செய்வதில் ரோட்டரியின் பங்குதாரர். இது 1985ம் ஆண்டு அப்பொழுது சர்வதேச ரோட்டரியி தலைவர் தேர்வாக இருந்த M.A.T. Caparas ஆல் அறிமுகப்படுத்தப்பட்டு 1988ம் ஆண்டு இது ஒரு ரோட்டரியின் சேவை திட்டமாக சர்வதேச ரோட்டரியால் அங்கீகரிக்கப்பட்டது.

RCC தொடங்குவது நீடித்த சேவை திட்டங்களை ஆரம்பிக்க மற்றும் செயல்படுத்த ஒரு சிறந்த வழி ஆகும். பாதுகாப்பான தண்ணீர், பட்டினி, மாசு, கல்வியறிவின்மை, மற்றும் போதுமான வீடுகள் இல்லமை போன்ற சில சமுதாய பிரச்சனைகளுக்கு ஆக்கபூரிவமான மற்றும் நிலையான தீர்வுகளை RCC மேற்கொள்கிறது. உள்ளூர் சமுதாயத்துடன் ஆலோசன நடத்த, தேவைகளை அடையாளம் காண, திட்டம் தீட்ட, செயல் படுத்த, கண்காணிக்க மற்றும் ஒரு திட்ட மதிப்பீடு செய்ய ஆகிய காரணங்களுக்காக RCC அதனை ஆதரிக்கும் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

மருதம் 2014 – RCC மாவட்ட மாநாடு

marudham-l

இடம்: கும்பகோணம், ஸ்ரீ பாலாஜி மஹால் – பச்சையப்பா தெரு.

நாள்: மே-மாதம் 4ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

பதிவு கட்டணம்: ரூ. 150.

மாநாடு குறித்த சிற்றேடு:  மருதம் 2014

Rotary’s Areas of Focus – 4

maternalதாய் சேய் நலம்(Maternal and Child Health)

1. குழந்தை ஆரோக்கியம்(Child Health Care)

செய்தி:

  • 5 வயதுக்கு கீழ் 90 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சத்துக் குறைவாலும், ஆரோக்கியமின்மையாலும் சுகாதாரக் குறைவாலும் இறக்கிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • தடுப்பு மருந்துகளும், ஆண்டிபயாடிக்ஸ்களும் வழங்கவும், தட்டம்மை,மலேரியா, நிமோனியா, எய்ட்ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் குழந்தைகள் இறப்பிற்குக் காரணங்கள்.
  • சத்துணவு வழங்கவும், தாய்ப்பால் புகட்ட தாய்மார்களை ஊக்குவிக்கவும், தாய்ப்பல் புகட்டப்பட்ட குழந்தைகள் அதிக சத்துடனும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கிறார்கள்.
  • தாயிடமிருந்து சேயிற்கு HIV பரவாமல் இருப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

2. கர்ப்பகால மற்றும் பிரசவ காலப் பாதுகாப்பு(Antenatal Care and Child Birth)

செய்தி:

  • ஆப்பிரிக்காவில் 5 சதவீத கர்ப்பிணிகள் கர்பந்தரித்திருக்கும் போதோ அல்லது பிரசவத்தின் போதோ இறக்கிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • சுகாதார தொழில் நிபுணர்களுக்குத் தேவையான பிரசவ சமயத்தில் பயன்படும் பொருட்கள் அடங்கிய கைப்பொருட்களை (Kits) வழங்குங்கள்.

செய்தி:

  • 80 சதவீத தாய்மார்களின் இறப்பு – பயிற்சி பெற்ற சுகாதார தொழில் சேவகர்கள் மூலம் தடுக்க முடியும்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • ஒப்புக்கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்டப் பயிற்சித் திட்டங்களுக்கு எல்ல விதங்களிலும் ஆதரவு அளியுங்கள்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • பயிற்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த உள்ளூர் மக்களை அழைத்து ஒப்படையுங்கள்.
  • ஏற்கனவே பிரசவகால, கர்ப்பகால பாதுகாப்புகளில் பயிற்சி பெற்ற ரோட்டேரியங்களை கலந்தாலோசித்து தேவையான பயிற்சி முகாம்களைச் செயல்படுத்டுங்கள்.
  • இத்துறையில் முன்னணியில் உள்ள வேறு நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படுங்கள்.

3. குடும்பக்கட்டுபாடு(Family Planning)

செய்தி:

  • வளரும் நாடுகளில் 40 சதவீதம் பேர் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை.
  • 5.3 கோடி தேவையற்ற விருப்பமில்லாத கர்ப்பங்களை குடும்பக் கட்டுபாடு முறைகளால் தடுக்கலாம்

நீங்கள் செய்யவேண்டியவை:

  • மக்கள் குடும்பக்கட்டுபாடு முறைகளை அறியும்படி வழி செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் 30 சதவீத இறப்புகளைத் தவிர்க்கலாம்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

கலாச்சார ரீதியாக மக்களை அணுகி குடும்ப்பக் கட்டுபாடு முறைகளை அறியும்படி செய்யவும். இவ்வாறு செய்தால் இத்திட்டம் வெற்றிபெறும்.

நன்றி: Rotary News – Apr 2013, தமிழாக்கம் PP Rtn.N.P. ராமஸ்வாமி, RC of இராசிபுரம்.

Rotary’s Areas of Focus – 3

waterகுடிதண்ணீர் மற்றும் சுகாதாரம்(Water and Sanitation)

1. சுகாதாரமும் சுத்தமும்(Sanitation and Hygiene)

செய்தி:

  • 260 கோடி மக்கள் போதிய சுகாதார வசதிகள் இல்லாமல் வாடுகிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • சுகாதார கழிப்பிடங்களை நிறுவி அவைகளிலிருந்து வெளியேறும் நீரை பாதுகாப்பான சாக்கடைகளில் இணைத்து விடுங்கள்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • உயர் தொழில்நுட்ப முறைகளைக் கையாளாதீர்கள். சுலபமான முறைகளைக் கையாண்டால் தொடர்ந்து செயல்பட ஏதுவாகும்.
  • நினைவில் கொள்ளுங்கள்: தண்ணீர் கிடைக்காமல் தாகத்தினால் இறப்பவர்கள் குறைவு. ஆனால் தடுக்கக்கூடிய தண்ணீரினால் உண்டாகும் நோய்களினால் லட்சக்கணக்கில் இறக்கிறார்கள்.

செய்தி:

  • ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் போதிய சுகாதார வசதிகளும், பாதுகாப்பற்ற தண்ணீரினாலும் இறக்கிறார்கள்.

செய்யவேண்டியன:

  • சுத்தமாக இருக்க பழக்கவழக்கங்களை கற்றுத்தரவும். கையை சோப்புப் போட்டு கழுவும் முறையால் 45 சதவீதம் வயிற்றுப் போக்கைத் தவிர்க்கலாம்.

2. நீர் எடுக்கும் இடங்களுக்கு சுலபமாக அடைவது மற்றும் நீரின் தன்மையை மேம்படுத்துவது.(Improve Access to Water and Water Quality)

செய்தி:

  • ஒவ்வொரு நாளும் ஆப்பிரிக்க பெண்களால் தண்ணீர் கொண்டுவர 6 மணி நேரம் செலவிடப்படுகிறது.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • மழைநீர் சேமிப்புத்திட்டத்தைச் செயல்படுத்துங்கள். மழைநீரை சேமித்து குடிக்கவும், பாசனம் செய்யவும், நிலத்தடி நீரை உயர்த்துவதும் இத்திட்டத்தின் பயனாகும்.

செய்தி:

  • 90 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • கிணறுகள் வெட்டவும், வீட்டில் பயன்படுத்தும் மணல் மற்றும் செராமிக் வடிகட்டிகள்(filters) பயன்படுத்தவும்.
  • குறைந்த விலையில் இதற்குத் தீர்வு காணுங்கள். குளோரின் மாத்திரைகள் பிளாஸ்டிக் பாத்திரங்களில் நீரை நிரப்பி வெய்யிலில் வைத்து தண்ணீரின் தரத்தை உயர்த்தலாம்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளூர் மக்களையும் கலந்தாலோசித்து தேவைகளுக்கேற்ப தீர்வு காணுங்கள்.
  • கிணறு அல்லது ஆல்குழாய்க் கிணறு தோண்டும்முன் சுற்றுப்புறச் சூழல் பாதிக்காமல் இருக்கவேண்டும். நீர் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
  • நீர்த்திட்டங்களைத் தொடர்ந்து பராமரிக்க உள்ளூர் நலவிரும்பிகளிடம் ஒப்படையுங்கள். இத்திட்டம் வெற்றி பெறும்.
நன்றி: Rotary News – Apr 2013, தமிழாக்கம் PP Rtn.N.P. ராமஸ்வாமி, RC of இராசிபுரம்.